கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக தோண்டிய பள்ளம் மூடாததால் தண்ணீர் தேங்கி உள்ளதால், பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகசுந்தரம், நீலந்தாங்கல்.