திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவகத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் மாடுகளும், நாய்களும் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தற்போது குரங்குகள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. எனவே கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் நாய்கள், குரங்குகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சம்பத், திருப்பத்தூர்.