ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மேலும் கால்நடைகள் சாலையின் நடுவே ஆங்காங்கே படுத்துக்கொள்கின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி நிலைத்தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவார்களா?