குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

Update: 2026-11-22 17:12 GMT

காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். அங்கு தினமும் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குரங்குகள் திடீரென குடியிருப்புகள், கடைகளில் புகுந்து தின்பண்டங்கள், பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்கின்றன. ஈரத்துணிகளை உலர வைத்திருந்தால் தூக்கி செல்கின்றன. குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க சம்ப்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவஞானம், திருவலம்.

மேலும் செய்திகள்