ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2026-11-22 17:23 GMT
கள்ளக்குறிச்சி உழவர் சந்தை முன்பு அதிகளவில் ஆக்கிரமிப்பு கடைகள் பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் தினமும் காலை உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சந்தைக்கு வரும் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்