மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இருந்தது. இடிந்துவிழும் நிலையில் இருந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அது இடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படவில்லை. இருப்பினும் ஆழ்துளை கிணறு மூலம் நேரிடையாக குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குடிநீா் வினியோகத்தின் போது மின்சாரம் தடைபட்டால் தண்ணீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தினமும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.