போடி- ரெங்கநாதபுரம் நான்கு வழிச்சாலையோரம் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதோடு காற்றின் வேகத்திற்கு ஈடுகட்ட முடியாமல் பதாகைகள் முறிந்து கீழே விழுந்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதாகைகளை விரைந்து அகற்ற வேண்டும்.