கம்பம் அருகே உள்ள அண்ணாபுரத்தில் சின்ன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் குளிக்க வருகின்றனர். அவ்வாறு வரும் போது, ஆபத்தை உணராமல் வாய்க்காலில் பல்டி அடித்து நீச்சல் போடுகின்றனர். அப்போது மாணவர்கள் நீரில் மூழ்கி அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மாணவர்கள் வாய்க்காலில் குளியல் போடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.