பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி ஊராட்சிக்கு உட்பட்ட மருவத்தூர், பனங்கூர் கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கிராம மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.