மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்

Update: 2026-10-10 21:38 GMT

திக்கணம்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லாய் பகுதியில் சாலையோரம் ஒரு பெரிய ஆலமரம் நிற்கிறது. இந்த மரம் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரத்தில் நிற்கும் ஆலமரம் பட்டுப்போன நிலையில் காணப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி பட்டுப்போன நிலையில் காணப்படும் ஆலமரத்தை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், கொல்லாய்.

மேலும் செய்திகள்