தெருநாய்கள் தொல்லை

Update: 2026-10-10 21:22 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காலேஜ் ரோடு முதல் வடுகன்பற்றுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளை தெருநாய்கள் கடிக்க விரட்டுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், தென்தாமரைகுளம். 

மேலும் செய்திகள்