காட்டுமன்னார்கோவில் வடக்கு வீதியில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை நடந்து செல்லும் பள்ளி மாணவர்களையும், வாகனத்தில் செல்பவர்களையும் விரட்டி கடிக்கப் பாய்கின்றன. இதனால் அவ்வழியாக பொதுமக்கள், மாணவர்கள் செல்லவே பயப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்த அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.