விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்கின்றன. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.