விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-08-02 16:32 GMT

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கல்லுப்பட்டி மேம்பாலம் அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் உடைந்த காலி மதுபாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி அடிக்கடி பழுதாவதுடன், பெரும் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. அரசு அலுவலகங்கள் பல அமைந்துள்ள இச்சாலை பகுதியில் சிதறிக்கிடக்கும் கண்ணாடி துகள்களால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிம்மதியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் காலி பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்