தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்

Update: 2026-08-02 15:12 GMT

சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை கிடங்கு பெரமனூர் மின் மயானம் அருகே செயல்படுகிறது. அங்குள்ள குப்பைகளில் கொட்டப்படும் உணவுகளை சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. அங்கிருந்து இறைச்சி கழிவுகளை இழுத்துக்கொண்டு பெரமனூர் ஊராட்சியில் உள்ள விவசாய பகுதிக்கு கொண்டு வருகின்றன. அங்கு இறைச்சி கழிவை சாப்பிடுவதில் தெருநாய்கள் இடையே சண்டை ஏற்படுகிறது. உணவு கிடைக்காத நாய்கள் வயல் பகுதியில் மேயும் ஆடு, கோழிகளையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. எனவே தெருநாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்