பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சமத்துவபுரம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகில் அதிகளவில் சுற்றிவரும் தெருநாய்கள் பள்ளிக்கு வரும் குழந்தைகளை கடிக்கப் பாய்வதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பெரிதும் அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் பெருகிவரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.