நிழற்குடை இல்லாததால் அவதி

Update: 2026-07-26 13:40 GMT

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் சந்தைக்கடை பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தினமும் பஸ் ஏறி, இறங்க ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் நிழற்குடை இல்லை. இதனால் மழை, வெயிலில் பஸ்சுக்காக காத்திருந்து பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அங்கு நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்