கால்வாய்கள் சேதம்

Update: 2026-07-26 13:39 GMT

கோத்தகிரி நகரில் குடிநீர் திட்ட பணிகளுக்காக பல்வேறு சாலையோரங்களில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்து உள்ளன. அவற்றை சரிவர சீரமைப்பதும் இல்லை. இதனால் மழைநீர், கழிவுநீர் வழிந்தோடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், சேதம் அடைந்த கால்வாய்களை புதுப்பிக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்