அனுமதி இல்லாத கடைகள்

Update: 2026-07-26 13:39 GMT

கோத்தகிரி நேரு பூங்காவை ஒட்டி உள்ள பகுதிகளில் நகராட்சி அனுமதியின்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே அந்த கடைகளை முறைப்படுத்தி, நகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்