எறும்புக்காடு முத்தாரம்மன் கோவில் கீழத்தெரு உள்ளது. இந்த பகுதியில் சாலையில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சதுடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜனதா, எறும்புக்காடு.