‘தினத்தந்தி’-க்கு பாராட்டு

Update: 2026-07-19 16:39 GMT

 பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் எல்லமேடு முத்துநகர் 3-வது வீதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. எனவே அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்