தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-19 13:37 GMT

கணபதி ராஜீவ் காந்தி சாலையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்