பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி புதுப்புதூரில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பழமையான புங்கை மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. தற்போது சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்து வருகின்றன. விரைவில் முழு மரமும் விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே ஆபத்தான அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.