விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசுக்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அதிலும் குறிப்பாக குழந்தைகள், சிகிச்சை பெறும் முதியோர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகினற்னர். கொசுக்களால் குழந்தைகளுக்கு டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.