தடுப்பணை கட்ட கோரிக்கை

Update: 2026-05-10 11:12 GMT

திருச்சி மாவட்டத்தில் அய்யாறு துறையூர் வட்டாரத்துக்கு உட்பட்ட புளியஞ்சோலை, பி.மேட்டூர், விசுவாம்பாள் சமுத்திரம் பாலகிருஷ்ணம்பட்டி வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு துறையூர் பகுதியில் விவசாய தேவைகளுக்கும், பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது. தற்போது அய்யாற்றில் தண்ணீர் திறப்பு இல்லாததாலும், கோடை காலம் என்பதாலும் வறண்டு போயுள்ளது. இதனால் விவாசாயிகள் பசன வசதிக்கும், பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டுக்கும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி அய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்