சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றது. மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று அச்சுறுத்துவதால் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.