ஆபத்தான கம்பம்

Update: 2025-09-14 11:57 GMT

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு வெங்கடேஷ்வரா நகரில் தனியார் பள்ளி அருகே தனியார் நிறுவனம் சார்பில் கம்பம் ஒன்று நடப்பட்டுள்ளது. இந்த கம்பம் கடந்த சில நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடமாட்டத்தின் போது இந்த கம்பம் முறிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்