உத்தமபாளையம் பகுதியில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் அதிக அளவில் பட்டாசுகளும் வெடிக்கப்படுகின்றன. இதனால் வயதானவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே விசேஷ நாட்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தவும், பட்டாசு வெடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.