பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2025-08-17 12:19 GMT

திருச்சி மாவட்டம், பாத்திமாபுரம் வடக்கு காட்டூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக இப்பகுதியில் 2 பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக ஒரு பொது சுகாதார வளாகம் இடிக்கப்பட்ட நிலையில் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு அருகே ஒரு சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் பூட்டி கிடப்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாடு இன்றி வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்