உத்தமபாளையம் இந்திராநகரில் உள்வட்ட அளவர் அலுவலகம், குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இது கடந்த பல மாதங்களாக செயல்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் அந்த கட்டிடத்தை மதுபான பாராகவும், சூதாட்ட மையமாகவும் மாற்றிவிட்டனர். இதனால் அந்த பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.