உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.