நாமக்கல்- சேந்தமங்கலம் செல்லும் வழியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் இரு புறங்களிலும் இறைச்சி, மீன் கடைகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் மோட்டார் சைக்கிளில், நடந்து செல்வோரை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் தெருநாய்களால் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளது.
-பால்ராஜ், சேந்தமங்கலம்.