குரங்குகள் தொல்லை

Update: 2024-09-22 17:58 GMT

சேந்தமங்கலம் அருகே புதன் சந்தைக்கு செல்லும் வழியில் நைனாமலை கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த பணியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சாப்பாடு உள்பட உணவுப் பொருட்களை மலைப்பாதையில் கொண்டு செல்லும்போது குரங்குகளால் தொல்லை ஏற்படுகிறது. மேலும் சாப்பாட்டு பொட்டலங்களை குரங்குகள் கூட்டமாக வந்து தூக்கி சென்று விடுகின்றன. இதனால் பல மாதங்களாக அவர்கள் அந்த தொல்லைக்கு இடையே வேலை பார்த்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்குள்ள குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்.

-கனகராஜ், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்