நாகர்கோவில் வேதநகரில் இருந்து மீன் கடை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிற்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். மேலும் விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.