விபத்து அபாயம்

Update: 2023-12-03 07:37 GMT

களியக்காவிளையில் இருந்து இரையுமன்துறைக்கு செல்லும் சாலையில் எஸ்.டி.மங்காடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் ஒரு ராட்சத மரம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், அந்த மரத்தின் அருகில் உயர் அழுத்த மின்கம்பிகளும் செல்கின்றன. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் குடியிருப்பவர்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். எனவே, சாய்ந்த நிலையில் காணப்படும் ராட்சத மரத்தை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்