நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தின் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி,கொடிகள் அகற்றப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அங்கு வரும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-பிரகாஷ், ராணித்தோட்டம்.