வேட்டவலத்தை அடுத்த ராஜந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாகுளம் பகுதியில் தண்டரை செல்லும் சாலையில் உள்ள வழிகாட்டி பலகை சேதமடைந்து பாதி மட்டும் உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் வழிகாட்டி பலகையில் உள்ள ஊர் பெயர் தெரியாமல் சிரமப்படுகின்றனர். அந்தப் பெயர் பலகையை சரி செய்ய சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.செல்வம், தளவாகுளம்.