திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் உள்ள சங்கு காலை 9 மணி, மதியம் 1 மணி, மாலை 5.30 மணிக்கு ஒலித்தது. இதனால் வேலைக்கு செல்வோர் பயன் அடைந்தனர். அந்தச் சங்கு தற்போது ஒலிக்காமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், மல்லவாடி.