வேட்டவலம்-திருவண்ணாமலை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மேலே அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஆபத்தான நிலையில் கீழே சாய்ந்துள்ளது. இதேபோல் வேட்டவலம் பேரூராட்சி உட்பட்ட கடைவீதியில் பல இடங்களில் அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான, அனுமதியின்றி வைக்கபட்ட விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயா, வேட்டவலம்.