தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிக்கட்டிப்பொட்டல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஆழ்குழாய் கிணறு உள்ளது. இந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்துதான் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், எந்தவித பாதுகாப்பும் இன்றி ஆழ்குழாய் கிணற்று பக்கவாட்டில் மின் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆழ்குழாய் கிணற்றின் மின்இணைப்பை பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், மணிக்கட்டிப்பொட்டல்.