திருவெண்ணெய்நல்லூர் அருகே மண்டகமேடு விவசாய நிலப்பகுதியில் மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றில் உள்ள கம்பம் பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் மின்மாற்றியில் உள்ள கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.