போச்சம்பள்ளியில் நான்கு ரோடு முதல் சந்தூர் செல்லும் சாலையானது வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் மதுபான பிரியர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை சந்தூர் ரோடு முழுவதும் ஆங்காங்கே நிறுத்தி விட்டு மது குடிக்கச் செல்வதுடன் வாகனங்களை தாறுமாறாகவும் ஓட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த கடையை நகரின் எல்லைக்கு வெளியே இடமாற்றம் செய்து அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதியில் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-பாலா, போச்சம்பள்ளி.