விபத்து அபாயம்

Update: 2023-08-30 06:49 GMT

விபத்து அபாயம்

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் அழகை ரசிப்பதற்கு வசதியாக காமராஜர் மணிமண்டபத்திற்கு மேற்கு பகுதியில் பல இடங்களில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கைகள் சேதமடைந்தும், கைப்பிடி கம்பி துருப்பிடித்த நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.. எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி அங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள், பாதுகாப்பு கைப்பிடி கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.9786764754

மேலும் செய்திகள்