விபத்து அபாயம்

Update: 2023-08-20 10:17 GMT

நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையும், அதன் இருபுறரும் வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஓடைகளில் பல இடங்களில் மேற்பகுதியில் போடப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்தும், இல்லாமலும் காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் சாலையில் இறங்கி நடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சிெமண்டு சிலாப்புகளை அகற்ற புதிய சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி.

மேலும் செய்திகள்