நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-08-20 07:15 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கார்திகைவடலி பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். ஆனால், இந்த மையத்தில் கழிவறை, சமையல் அறை வசதிகள் இல்லை. மேலும், சுற்றுச்சுவரும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், குழந்தை பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன. எனவே, குழந்தைகள் நலன்கருதி அங்கன்வாடி மையத்தில் கழிவறை, சமையல்அறை வசதிகளுடன் சுற்றுச்சுவரும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரராஜன், கார்த்திகை வடலி.

மேலும் செய்திகள்