நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பெருவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடைக்குள் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று கிடந்தது. இதனால், கழிவுநீர் வடிந்தோட இடையூறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடைக்குகள் கிடந்த மின்கம்பத்தை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-பிரபானந்து, பெருவிளை.