மதுப்பிரியர்களின் கூடாரமாகும் மைதானம்

Update: 2023-07-30 14:51 GMT

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சி மைதானம் உள்ளது. இந்த மைதானம் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. இதன்காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மதுப்பிரியர்கள் கூட்டமாக நின்று தகாத வார்த்தைகளை பேசுகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்