நாகர்கோவில் குடிநீர் திட்ட பணிக்காக சாலையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. கேசவன்புதூரில் இருந்து தோமையார்புரம் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்டு சிலாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், அதன் அருகில் சாலையோரத்தில் தோண்டிய பள்ளத்தை முறையாக மூடவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் மண் போட்டு நிரப்பிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பால்ராஜ், தோமையார்புரம்.