நாகர்கோவில் பள்ளிவிளை டவுண் ெரயில் நிலையம் அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கிருஷ்ணன்கோவில் கால்வாய் உள்ளது. முன்பு இந்த கால்வாயில் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்ற வந்தது. தற்போது, விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதால் அந்த கால்வாய் கழிவுநீர் ஓடையாக மாறியுள்ளது. இந்த கால்வாயின் 5-வது மடை அடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டோ, பள்ளிவிளை.