திசையன்விளை பேரூராட்சி நவ்வலடி ரோட்டில் அற்புத விநாயகர் கோவில் முதல் தெரு உள்ளது. அந்த தெருவினை சுட்டிக்காட்டும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மிகவும் தாழ்வாகவும் கம்பங்களின் பின்னால் மறைவாகவும் உள்ளது. இதனால் முகவரி தேடி வரும் வெளியூர் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஆகவே பொது மக்களுக்கு எளிதில் தெரியும் வண்ணம் தெரு பெயர் பலகையை அமைத்திட வேண்டுகிறேன்.